மூன்றாவது தடவையாகவும் பதவிக்காலத்தை நீடித்த கோட்டாபய
gotabaya
extended
By Jaso
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் அரச தலைவர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன் (28) நிறைவடையவிருந்த நிலையில், அதன்பதவிக் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு ஏப்ரல் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் மூன்றாவது தடவையாக நீடிக்கப்பட்டுள்ளது.
08 ஜனவரி 2015 முதல் 16 நவம்பர் 2019 வரையிலான காலப்பகுதியில் அரச அதிகாரிகள், பொது நிறுவனங்களின் ஊழியர்கள், ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பழிவாங்கல்களுக்கு இந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி