கோட்டாபய அரசுக்கு தலையிடி கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்ட சுதந்திரக் கட்சி
பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டு மக்கள் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பு ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
“ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தில் சுதந்திர கட்சி பிரதான பங்காளி கட்சியாக உள்ளது.
கூட்டணியினால் ஒன்றிணைந்ததன் காரணமாக அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கும், தீர்மானங்களுக்கும் துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது.
பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டு மக்கள் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.
மக்களின் எதிர்பார்ப்பு ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் உள்ள 11 பங்காளி கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெகுவிரைவில் வெளியேறலாம்.
சிறந்த நிர்வாக முகாமைத்துவம் இல்லாத காரணத்தினால் சமூகத்தின் மத்தியில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை காணப்படுகிறது” என்றார்.