கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் பதவி துறந்தார்
Gotabaya Rajapaksa
Sri Lanka Politician
Nimal Lanza
By Jaso
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து சுகீஸ்வர பண்டார இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகீஸ்வர பண்டார முன்னாள் அதிபரின் பிரத்தியேக செயலாளராக பல வருடங்கள் பணியாற்றினார்.
கோட்டாபய ஆட்சிக்கு வருவதற்கு முன்பே
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியவர் சுகீஸ்வர பண்டார.

எனினும், தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிமல் லான்சாவின் புதிய கூட்டணியுடன்
நிமல் லான்சா மற்றும் குழுவினரால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியுடன் அவர் தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்