கோட்டாபய இன்று CID யில் முன்னிலை..!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (01) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மீதான அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கமைய அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இதற்கு முன்னரும் இந்த விடயம் தொடர்பில் சமன் ஏக்கநாயக்கவிடம் சி.ஐ.டி வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
