கோட்டாபய அரசாங்கத்திற்கு பல முகங்கள்
srilanka
gotabhaya
mano ganeshan
By Vasanth
கோட்டாபய அரசாங்கத்திற்கு பல முகங்கள் இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதில் ஒரு முகம் சரத் வீரசேகர என்ற அமைச்சர்.அவர் புர்காவை தடை செய்யும் வர்த்தமானியில் கையெழுத்துவிட்டதாக தெரிவித்த நிலையில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் அப்படி தடை ஏதும் இல்லை அது ஒரு முன்மொழிவுதான் என்கிறார்.இதன்படி உள்நாட்டுக்கு சரத்வீரசேகர, வெளிநாட்டுக்கு வெளியுறவு அமைச்சின் செயலாளர்.இது அரசாங்கத்தின் முதல் இரண்டு முகம்.
இவ்வாறு பல முகங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ள ஊடக சந்திப்பு காணொளியை காணலாம்