கோட்டாபய தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்! ஆளும் தரப்பு கோரிக்கை
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் போராட்டங்களை தடுக்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் வீடுகள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஜாதிக ஜன பலவேகய, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகளின் பலருக்கு தொடர்பு இருப்பதாக அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தனது உரையில்,
தற்போதைய அரசாங்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வீதிக்கு வந்துள்ளனர். ஆனால் பல கட்சி உறுப்பினர்கள் போராட்டங்கள் மூலம் தங்களுக்கு நன்மைகளை தேடுகிறார்கள்.
எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் அதிகாரத்தை பயன்படுத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
நாட்டு மக்களைக் கருத்திற் கொண்டு அரச தலைவர் தீர்மானம் எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.