இலங்கை அரசின் முடிவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்ட தகவல்
Sri Lanka
Gotabhaya Rajapaksa
Pakistan
By Vasanth
இலங்கை அரசாங்கத்திற்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கொவிட் நோய்த் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கொவிட் நோய்த் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது.இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு தொடர்பில் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்தமை குறித்து இலங்கை அரசாங்கத் தலைமைகளுக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.