கோட்டாபய - மகிந்தவிற்கு எதிர்காலத்தில் ஏற்படப் போகும் நிலை இதுதான்! எச்சரிக்கிறது பங்காளிக் கட்சி
நுவரெலியா மாவட்டத்தில் ஆளும் கட்சி பிரதிநிதிகள் ஆடை அணிந்து கொண்டு வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ (Nimal Piyatissa) தெரிவித்துள்ளார்.
நாளை இந்த நிலைமை நாட்டுத் தலைவர்களுக்கும் ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டங்களில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமே. வறுமை மற்றும் நெருக்கடிகள் காரணமாகவே அனைத்து விவசாயிகளும் தாமாக முன்வந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று தங்களால் வீதியில் இறங்கி பயணிக்க முடியவில்லை, கிராமங்களில் நல்ல விடயத்திற்கோ துன்பியல் சம்பவங்களுக்கோ எம்மால் செல்ல முடியவில்லை.
எமக்கு வாக்களித்த மக்களே எங்களை விரட்டியடிக்கின்றனர்.
அரசாங்கத்தின் சிலரது தான் தோன்றித்தனமான செயற்பாடுகளால் 69 இலட்சம் மக்களுக்காக தனிப்பட்டு செயற்பட வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.