ரூபா 3000 மில்லியன் பணம் முறைகேடு - மூன்று முக்கிய அதிகாரிகளுக்கு கோட்டாபய அரசு வழங்கிய உத்தரவு
srilanka
president
cash
farmers
By Vasanth
ரூபா 3000 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தினர் எனத் தெரிவித்து மூன்று முக்கிய அரச அதிகாரிகள் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.
நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையைச் சேர்ந்த பிரதி முகாமையாளர், நிதிப்பணிப்பாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர் ஆகியோரே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர்களாவர்.
தனது அறிவுறுத்தலின் பேரில் குறித்த மூன்று அதிகாரிகளும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விற்று பணத்தை பெற்றமை, நெல்லை சேமிக்க பைகள் வாங்குவதற்கு அதிகாரசபையின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி