சிறிலங்காதீஸ்வர பத்ம விபூசணர் கோட்டாபாய இரண்டு தினங்களுக்கு முன்னர் விடுத்த சூளுரை

By Niraj David Jan 04, 2022 02:10 PM GMT
Report

சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு ஏற்கனவே ‘ரேமினேற்றர்’ போன்ற அடைமொழிகள் இருந்தாலும் கடந்த ஞாயிற்றுக் கிழைமை முதல் அவருக்கு ‘சிறிலங்காதீஸ்வர பத்ம விபூசணர்’ என்ற விருது ஒட்டிக்கொண்டுவிட்டது.

கோட்டே சிறிகல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையில் உள்ள பௌத்த தேரர்கள் இந்த கௌரவப் பட்டத்தை அவருக்கு வழங்கியபோது கோட்டாபாயவின் கடந்த கால மற்றும் சமகால பணிகளை கருத்திற் கொண்டு இந்த மதிப்பளிப்பை செய்வதாக குறிப்பிட்டுக்கொண்டார்கள்.

இந்த விருதை பெற்றுக்கொண்டு பதிலுரை வழங்கிய அவர் சிறிலங்காவின் இராணுவ அதிகாரியாகவும் பாதுகாப்புச்செயலாளராகவும் தான் நாட்டுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டதாக கூறியவர் தனது இருபது வருடகால இராணுவச் சேவைக்காலத்தின் போது, ஈழப்போரின் ஆரம்ப காலத்திலும் இரண்டாம் ஈழப்போரின் போதும், தமிழர் தாயகபகுதிகளில் தான் போர்புபுரிந்தாக பெருமை பாராட்டியிருந்தார்.

நான் அப்படிச் செய்தேன் இப்படிச்செய்தேன் அதற்காக ஏற்கனவே ‘ரணசூர்’ ‘ரணவிக்ரம’ பதக்கங்களையும் ஜனாதிபதி விருதுகளையும் தான் பெற்றதாகவும் தனது உரையில் அவர் குறிப்பிட மறக்கவில்லை.

ஆனால் கோட்டாபாயவுக்கு 'சிறிலங்காதீஸ்வர பத்ம விபூசணர்' என்ற விருது வழங்கப்பட்ட அதே நாளில்தான் ‘றிங்கோ 5 மேடர்ஸ்’ (Trinco 5 murders) என அனைத்துலக அரகில் பதிவுபெற்ற பச்சைக்குருதி படுகொலைகளின் 16 வது நினைவு தினம் பதிவாகியிருந்தது.

2006 இல் அதுவும் மோதல் தவிர்ப்பு நிலை இருந்தபோது திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக மரணதண்டனை பாணியில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்த 5 அப்பாவி மாணவர்களுக்கு இன்றுவரை நீதிகிட்டவில்லை.

கோட்டாவுக்கு விருது வழங்கப்பட்ட அன்றைய தினமும் திருமலை கடற்கரைக்கு முன்பாக உள்ள காந்தி சிலை சுற்று வட்டத்தில் அஞ்சலிகள் செய்யப்பட்டன.

 இந்த பச்சைக்குருதி படுகொலையை செய்த சந்தேகத்தில் சிறிலங்கா அதிரடிப்படை கைது செய்யப்பட்டிருந்தாலும் வழமைபோலவே போதிய சாட்சியங்கள் இல்லை என அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த பச்சைக்குருதி படுகொலை ஏற்கனவே ஐ.நா மனித உரிமை பேரவை உட்பட்ட அனைத்துலக அரங்கில் எதிரொலித்தாலும் இன்றுவரை நீதி கிட்டி குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

ஆனால் மறுபுறத்தே அந்த காலகட்டத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளராக இருந்த அதே முகத்துக்கு, அந்த படுகொலை நாளில் பௌத்த தலைகள் ‘சிறிலங்காதீஸ்வர பத்ம விபூசணர்’ என்ற விருமை வழங்கி அழகு பார்த்துள்ளார்கள்.

என்னே முரண்நிலை இது!!

இந்த விருதை பெற்றுக்கொண்ட கோட்டாபாய, 'தான் பெரும்பான்மை சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்பதை, ருவன்வெலி மஹா சேயவுக்கு முன்பாக ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது அறிவித்த தனக்கு சிங்கள பௌத்தர்களையும் அவர்களின் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு உறுதி ஏற்பதாக கூறியிருந்தார்.

தான் அரசதலைவராக பதவியேற்பதற்கு முன்னர், கூரகல புண்ணிய பூமி, மு{ஹது மஹா விகாரை, தீகவாபி புண்ணிய பூமி போன்ற பௌத்த விஹாரைகளுக்குரிய காணிகளின் நிலைமை எப்படி இருந்தது என குறிப்பிட்டவர் தப்போது அந்த விஹாரைகளின் காணிகள் மீட்கப்பட்டமை குறித்து பௌத்தர்கள் மகிழ்ச்சியடைய முடியும் எனக்குறிப்பிடடார்.

அதாவது தமிழ்பேசும் மக்களின் பூர்வீக இடங்களில் இடம்பெறும் பௌத்த ஆக்கிரமிப்புகளின் பிரதான ஆழி அதாவது ‘சுவிச்’ தன்னிடம் இருப்பதை அவர் பெருமையாகவே குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அசௌகரியங்கள் காரணமாக ஒருசிலர் தன்னை அவமானப்படுத்தினாலும் அதனைத் தாங்கும் சக்தி தன்னிடம் உள்ளதாக குறிப்பிட்டார்.

இனிமேலும் கடுமையான முடிவுகளை எடுப்பதற்குத் தான் தயாராகவே இருப்பதாக பௌத்ததலைகளுக்கு முன்னால் அன்றையதினம் சூளுரைத்தார் சிறிலங்காதீஸ்வர பத்ம விபூசணர் கோட்டாபாய ராஜபக்ச.

அதனை அவர் இன்றையதினம் செய்தும் காட்டியுள்ளார்.அதாவது தனது அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சுப்பதவியை வகித்த சுசில் பிரேமஜயந்தவை அவருக்குத் தெரியாமலேயே அமைச்சுப்பதவியிலிருந்து தூக்கி வீசியுள்ளார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், நல்லூர், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020