ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து சலுகைகளை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்காலத்தில் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அதிகமான மக்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைப்பு நிதி
சில சந்தர்ப்பங்களில், சேவை வருங்கால வைப்பு நிதியிலிருந்து 30 சதவீத சலுகைகளை பெறும்போது சிலர் மோசடியான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தூண்டப்பட்டுள்ளதாகவும் அவர் சட்டிக்காட்டியுள்ளார்.
கூடுதலாக, இடைத்தரகர்களின் தலையீடும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகாமைத்துவத் தொகுதி
மேலும், புதிய ஊழியர் சேமலாப நிதிய முகாமைத்துவத் தொகுதி ஒன்றை உருவாக்குவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்த விடயத்தை கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
