அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை! வெளியானது சுற்றறிக்கை
Government Employee
Sri Lankan Peoples
Money
By Kanna
அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளமில்லாத வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை பெற்றுக் கொள்வது தொடர்பான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
குறித்த சுற்றறிக்கை திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்தாண்டு கால விடுமுறை
தொழில் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.
இதன்படி, அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
இதன் மூலம் அரசு ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும் எனவும் இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான சுற்றறிக்கையே தற்போது வெளியாகியுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி