வடக்கில் தலை விரித்தாடும் கொலைகார கும்பல்! அச்சத்தில் மக்கள் - சஜித் ஆதங்கம்

People SJB SriLanka Sajith Premada
By Chanakyan Jul 03, 2021 09:14 AM GMT
Report

வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் பாரதூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளதா என தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்களித்த அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கொலையாளிகளை கைது செய்யும் விடயத்தில் மந்தகதியில் செயற்படாமல் துரிதமாக செயற்பட்டு நாட்டில் குறிப்பாக வடக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போதே அவர் இந்த விடயத்தினை  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பலவீனமான இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்வாறான நிலையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுகிறது.

உரப்பற்றாக்குறையாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

அவ்வாறு உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அவ்வாறு இறக்குமதி செயற்வதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை.

மக்களைப் பற்றி சிந்திக்காமல் எதற்காக உரம் தொடர்பில் இவ்வாறு தன்னிச்சையான தீர்மானம் எடுக்கப்பட்டது ? இந்தஅரசாங்கத்திற்கு மனிதாபிமானம் இல்லை. நாட்டை நிர்வகிக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

பலவீனமான உங்கள் கொள்கையினால் விவசாயத்தையும் விவசாயிகளையும் சீரழிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். மக்கள் அனைவரையும் கொன்று குவிப்பதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது? உரம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

எனவே சரியான தீர்மானத்தை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம். தேசிய பாதுகாப்பு தொடர்பில் நிபுணத்துவம் பெற்றுள்ளதாக கூறியவர்களே இன்று ஆட்சியில் உள்ளனர். தற்போது வடக்கில் கொலைகாரர்களால் மக்கள் மீது கடுமையான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதோடு அவர்களின் கைகளும் வெட்டப்பட்டுள்ளன.

இந்த கொலை கும்பலை கைது செய்ய முடியாமல் போயுள்ளதா என்று தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறிய அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றேன் என்றார். இந்த அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் மக்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பொய்யாகியுள்ளது. எனவே இவ்வாறான கொலையாளிகளை கைது செய்யும் விடயத்தில் மந்தகதியில் செயற்படாமல் துரிதமாக செயற்பட்டு நாட்டில் குறிப்பாக வடக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தலை விரித்தாடும் கொலைகார கும்பல்! அச்சத்தில் மக்கள் - சஜித் ஆதங்கம் | Government Is Trying To Massacre All The People 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020