அரசாங்கத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை

TNA M A Sumanthiran Government Of Sri Lanka
By Jaso Aug 20, 2022 05:29 PM GMT
Report

சர்வதேசத்திற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்

பயங்கரவாதம் எனச் சொல்லி பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை மூன்று மாதங்களுக்கு தடுப்பிலேயே வைத்திருப்பதற்கான யோசனை மிகவும் வருந்தத்தக்கது. அரசாங்கம் சர்வதேச சமுகத்திற்கு இது குறித்து பதில் சொல்ல வேண்டி இருக்கும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் கைது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

காவல்துறை ஊடகப் பிரிவு அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூன்று பேர் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை கட்டளை ஒன்றை பெற்று மூன்று மாதங்கள் தடுத்து வைத்திருப்பதற்கு தாங்கள் கோரியிருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.

அரசாங்கத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை | Government Must Respond To University Student Ban

பயங்கரவாத தடைச் சட்டம் 

பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட விடயம். கடந்த ஆட்சிக்காலத்திலே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி வேறொரு சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்திருந்தது. இந்த பயங்கரவாத தடைச் சட்டம் மிக மோசமானது. அதை முற்றாக நீக்க வேண்டும் என நாடு பூராகவும் ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றோம்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுகின்ற வரை அதனை உபயோகிக்க மாட்டோம் என வாக்குறுதி கொடுத்திருக்கின்றது. அவ்வாறான சூழ்நிலையில் தான் திடீரென மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை உபயோகிக்கின்றார்கள்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் வசந்த முதலிகே மற்றும் இருவர் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டனர். 16 பேருக்கு பிணை கொடுக்கப்பட்ட போதும் இவர்களுக்கு மட்டும் பயங்கரவாத தடைச் சட்டம் பிரிவு பிரயோகிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை | Government Must Respond To University Student Ban

 மக்களின் ஜனநாயக வழியிலான போராட்டம்

காலாவதியாகி இருக்க வேண்டிய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டுமென அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றபோதும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உபயோகிக்க ஆரம்பிப்பது மிகவும் மோசமான அடிப்படையாக நாங்கள் கருதுகிறோம். உபயோகிக்கப்படக்கூடாது. பயங்கரவாத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. மக்கள் ஜனநாயக வழியில் போராடுவது அவர்களுக்கான உரிமை. அதற்காக அவர்களுக்கு தண்டனை கூட வழங்க முடியாது.

ஆனால் அதனை பயங்கரவாதம் என சொல்லி மாணவர் தலைவர்களை மூன்று மாதங்களுக்கு தடுப்பிலேயே வைத்திருப்பதற்கான இந்த யோசனை மிகவும் வருந்தத்தக்கது. அரசாங்கம் சர்வதேச சமுகத்திற்கு இது குறித்து பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

அரசாங்கத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை | Government Must Respond To University Student Ban

எனவே தடுத்து வைத்திருக்கும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதோடு இந்தச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நாங்கள் முன் வைப்போம்-என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்