ஆசிரியர் இடமாற்ற விவகாரம் - ஆளுநரை சந்தித்த தமிழர் ஆசிரியர் சங்கம்
Ministry of Education
Ceylon Teachers Service Union
Education
Teachers
schools
By Kajinthan
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (21.10.2025) செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
ஆசிரிய ஆளணிச் சீராக்கம்
அத்துடன் ஆசிரிய ஆளணிச் சீராக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தொடர்பான தரவுகள் அதிகாரிகளிடம் இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படாமை பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது என்றும் ஆசிரிய சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்