மக்களின் பெருபான்மையைப் பெற்ற அரசாங்கத்தினால் முடியும்! முறையான நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண 1956இல் இருந்து ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் முயற்சித்தார்கள். என்றாலும் அந்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.
என்றாலும் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டுள்ள இந்த அரசாங்கத்தினால் அதனை செய்யமுடியும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாடு ஒருபோதும் முன்னுக்கு செல்ல முடியாது. அத்துடன் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் எமக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்க அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது.
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமைத்து இதனை செய்திருந்தால் எமக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் குறைந்திருக்கும் என தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.