இந்திய தடுப்பூசியை சமையல் எண்ணெயாக பயன்படுத்தியுள்ளது அரசாங்கம் - வெளிவந்த குற்றச்சாட்டு
கொவிட் வைரஸ் நாட்டின் பல இடங்களிலும் பரவியுள்ள சூழ்நிலை குறித்து அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் போதுமான கவனம் செலுத்தவில்லை என்று மருத்துவ ஆய்வக வல்லுநர்கள் சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் இந்திய அரசாங்கம் அனுப்பிய தடுப்பூசியை சமையல் எண்ணெயாக அரசாங்கம் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அரசாங்கத்திடமிருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட 500,000 கொவிட் தடுப்பூசிகளில் மீதமுள்ள 60,000 த்தை வைத்துக் கொண்டு நாட்டை காப்பாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய வகை வைரஸ் பரவுவதால் முழு நாடும் முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தபோதிலும் இதுபோன்ற தேவை இல்லை என்று அதிகாரிகள் கூறியிருப்பது புதிய வகையை அவர்கள் எவ்வளவு எளிமையாக எடுத்துள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஐந்து மாவட்டங்களில் புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அந்த ஐந்து மாவட்டங்களில் மட்டுமே ஆபத்து இருப்பதாக சுகாதார அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர், ஆனால் வைரஸ் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவியுள்ளதா என்பது குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏனைய மாவட்டங்களுக்கு தொற்று பரவவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வரை அதிக ஆபத்து உள்ளது, மேலும் திரிபு வேகமாக பரவுவதால் ஏராளமான தொற்றுநோய்கள் ஒரே நேரத்தில் ஏற்படக்கூடும். எனவே, கொரோனா தடுப்பூசி அளவை மிகக் குறைந்த அளவிலேயே வைத்து, அதை சமையல் எண்ணெயாக மாற்றாமல் நாட்டின் மக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
you may like this