வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம் : ஆளுநரின் கண்டிப்பான உத்தரவு

Jaffna Northern Province of Sri Lanka Teachers
By Kajinthan Mar 11, 2026 06:06 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் 'சேவையின் தேவை கருதி' ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே, வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

  வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (11.03.2026) மாலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள், தொடர் வேலைத்திட்டங்கள் மற்றும் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், திட்டங்களை முன்னெடுப்பதில் நிலவும் சவால்களை இனங்கண்டு, அவற்றை எவ்வாறு வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இடமாற்றத்தில் இறுக்கமான நடைமுறை

இதன் பின்னர் விசேட கருத்துகளைத் தெரிவித்த ஆளுநர், வழங்கப்பட்ட எந்தவொரு இடமாற்றமும் மேன்முறையீடு காரணமாக நிறுத்தப்பட்டால், அந்த வெற்றிடத்துக்குப் பதிலாக உடனடியாக மாற்று இடமாற்றமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும். நடப்பாண்டுக்கான இடமாற்றங்களை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்கத் தவறும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுற்று நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும், எனத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம் : ஆளுநரின் கண்டிப்பான உத்தரவு | Governor Order Transfer Teachers Northern Province

 பாடசாலைகளில் இடம்பெறும் சட்டவிரோதப் பண அறவீடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்ட ஆளுநர், இலவசக் கல்வி நடைமுறையில் உள்ளபோதிலும், பாடசாலைகளில் ஏதாவது ஒரு வழியில் மாணவர்களிடம் பணம் அறவிடும் செயற்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

யாழில் கொடூரம் : மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி!

யாழில் கொடூரம் : மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி!

பாடசாலைகளில் இடம்பெறும் சட்டவிரோதப் பண அறவீடுகள்

இது தொடர்பில் எனக்கு தினமும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. சில பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், குறிப்பிட்ட சில பெற்றோர்கள் ஊடாகப் பணத்தை அறவிடும் செயற்பாட்டை முன்னெடுத்துவிட்டு, அதற்கும் தமக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என நழுவப் பார்க்கின்றனர்.

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம் : ஆளுநரின் கண்டிப்பான உத்தரவு | Governor Order Transfer Teachers Northern Province

வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளுக்குத் திடீர் களப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அங்கு, இருப்பில் பதிவு செய்யப்படாமல் அன்பளிப்புகள் பெறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதிபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இவ்விடயத்தில் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரமே இச்சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும், என வலியுறுத்தினார்.

மரதன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட மாணவனுக்கு நேர்ந்த துயரம்

மரதன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட மாணவனுக்கு நேர்ந்த துயரம்

மாகாண மட்டப் பண்பாட்டுப் பெருவிழா

மாகாண மட்டப் பண்பாட்டுப் பெருவிழாவை இந்த ஆண்டு செப்ரெம்பர் மாத இறுதிக்குள் நிறைவுசெய்யும் வகையில், பிரதேச மற்றும் மாவட்ட மட்டப் பண்பாட்டுப் பெருவிழாக்களை முன்கூட்டியே நடத்தி முடிப்பதற்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உரிய நடவடிக்கைகளை உறுதிசெய்ய வேண்டும் என ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம் : ஆளுநரின் கண்டிப்பான உத்தரவு | Governor Order Transfer Teachers Northern Province

மேலும், எதிர்வரும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, 'வர்ண இரவு' விருதுகளுக்கான பரிசுத் தொகைகள் தொடர்பில் அனைத்துத் தரப்பினருடனான விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுமாறு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளரைக் கேட்டுக்கொண்டார்.

இலங்கையர்களுக்கு வெளிநாடொன்றில் புதிய வேலைவாய்ப்பு களம்

இலங்கையர்களுக்கு வெளிநாடொன்றில் புதிய வேலைவாய்ப்பு களம்

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிரான விசாரணைகளைக் காரணம் காட்டி அவர்களின் ஓய்வூதியம் இழுத்தடிக்கப்படுவது தொடர்பிலும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார். 'தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம் : ஆளுநரின் கண்டிப்பான உத்தரவு | Governor Order Transfer Teachers Northern Province

எனினும், எவ்விதத் தவறுகளும் இழைக்காதவர்கள் தமக்குரிய காலத்தில் எவ்விதத் தாமதங்களுமின்றித் தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்,' எனவும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர், விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026