நிலக்கரி மோசடியின் சுமையை மக்கள் மீது சுமத்தும் அரசாங்கம்! சஜித் குற்றச்சாட்டு
மின் கட்டணங்களை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு, இந்த நாட்டில் உள்ள மின்சார நுகர்வோர் மீது தரமற்ற நிலக்கரி மோசடியின் சுமையைச் சுமத்துவதற்கான ஒரு வழியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
மின் கட்டண உயர்வு தொடர்பாக ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர்,
“இந்த நிலக்கரி ஊழல் மூலம் நாட்டின் மின் நுகர்வோர் மீது சுமையை ஏற்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
18% உயர்வு
இருந்த போதிலும்,பொதுப் பயன்பாட்டு ஆணையமும் அரசாங்கமும் மின் கட்டணங்களை 18% உயர்த்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.

இந்த மின் கட்டண உயர்வு என்பது, தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து அரசாங்கம் பெறும் இலஞ்சம்.
180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு இந்த புதிய கட்டணங்கள் விதிக்கப்பட்டதால் உயர் நடுத்தர வர்க்கத்தினர், தொழிலதிபர்கள், வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.