பெண் கிராம அலுவலரை தாக்க முயற்சி! தீர்வு வரை சுகயீன விடுமுறை அறிவித்த அதிகாரிகள்

Mannar Sri Lankan Peoples NPP Government
By Independent Writer Dec 30, 2025 12:13 PM GMT
Report

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை (29) காலை மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் புதுக்குடியிருப்பு கிராம அலுவலர் தனது அரச கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பிரதேச செயலகத்திற்குள் நுழைந்த கும்பல் குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட தோடு, அவரை தகாத வார்த்தைகளால் பேசி,அவரது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் அவர் ஒரு பெண் கிராம அலுவலர் என்பதால் அவரது கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.குறித்த சம்பவத்திற்கு கிராம அலுவலர்கள் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டித்ததோடு,இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (30) காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் அநுர! சிறை மருத்துவமனையில் டக்ளஸ்! சேதிகள் என்ன?

உச்ச நீதிமன்றத்தில் அநுர! சிறை மருத்துவமனையில் டக்ளஸ்! சேதிகள் என்ன?


சட்ட நடவடிக்கை

இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணியளவில் மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு முன்னாள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஒன்று கூடி கருப்பு பட்டி அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெண் கிராம அலுவலரை தாக்க முயற்சி! தீர்வு வரை சுகயீன விடுமுறை அறிவித்த அதிகாரிகள் | Grama Niladhari On Sick Leave Until Further Notice

குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட குறித்த நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சுகயீன விடுமுறை

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பாதிக்கப் படாதவர்களும் தமக்கான நிவாரணங்களை வழங்குமாறு தொடர்ந்து பல்வேறு விதங்களில் தம்மை அச்சுறுத்தி வருவதாகவும்,தாங்கள் அரச சுற்று நிருபங்களுக்கு அமையவே தமது கடமைகளை பல்வேறு இடர்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருவதாகவுதம் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம அலுவலர்கள் தெரிவித்தனர்.

பெண் கிராம அலுவலரை தாக்க முயற்சி! தீர்வு வரை சுகயீன விடுமுறை அறிவித்த அதிகாரிகள் | Grama Niladhari On Sick Leave Until Further Notice

எனவே குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும்,கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி படுத்துமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப் பட்டதோடு, தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(30) முதல் தொடர் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக சிறிலங்கா ஐக்கிய கிராம அலுவலகர் சங்கத்தின் மன்னார் நகர பிரதேச கிளையின் தலைவர் கமலேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

பழுதடைந்த ஐபாட்டினை காட்டி இழப்பீட்டு காசு வாங்கினேன்: போட்டுடைத்த அர்ச்சுனா!

பழுதடைந்த ஐபாட்டினை காட்டி இழப்பீட்டு காசு வாங்கினேன்: போட்டுடைத்த அர்ச்சுனா!

யாழில் தரம் 07 மாணவி ஒருவரின் முன்மாதிரி செயல்

யாழில் தரம் 07 மாணவி ஒருவரின் முன்மாதிரி செயல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023