சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலக கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்!

Government Of Sri Lanka Strike Sri Lanka Grama Niladi
By Sathangani Aug 15, 2026 10:33 AM GMT
Report

இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று (15) முதல் சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் மீள அறிவிக்கும் வரை சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான இலங்கை கடற்படை படகு ! மீட்கப்பட்ட 11 பேர்

விபத்துக்குள்ளான இலங்கை கடற்படை படகு ! மீட்கப்பட்ட 11 பேர்

மேலதிக கொடுப்பனவு

அவர் மேலும் தெரிவிக்கையில், "இன்று முதல் சனிக்கிழமை அலுவலக நாட்களிலிருந்து விலகுமாறு ஒரு சங்கமாக நாங்கள் தீர்மானித்து ஏனைய சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலக கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்! | Grama Niladharis Abstain From Duties On Saturdays

அதற்கமைய, எவ்வித மேலதிக கொடுப்பனவும் இன்றி எங்களது விடுமுறையை தியாகம் செய்து மேற்கொள்ளும் அந்த அலுவலக நாளை நாங்கள் தவிர்க்கிறோம்.

மேலும், அன்றைய தினம் நாங்கள் களப் பணிகளை மேற்கொள்ள மாட்டோம். அதன்படி, சனிக்கிழமை அலுவலக நாளை புறக்கணிக்கிறோம். அதற்கமைய, கிராம உத்தியோகத்தர்கள் இனிமேல் மறு அறிவித்தல் வரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே பிரிவு அலுவலகங்களில் தங்கியிருப்பார்கள்." என தெரிவித்தார்.

யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு

யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு

இரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை

இதேவேளை பயணக் கொடுப்பனவை அதிகரித்தல், பட்டப்படிப்பை குறைந்தபட்ச தகுதியாக மாற்றுதல், கம்மன்பில குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குதல், சனிக்கிழமை மற்றும் அரச விடுமுறை நாட்களில் செய்யப்படும் சேவைக்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் கடந்த 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மருத்துவ விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலக கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்! | Grama Niladharis Abstain From Duties On Saturdays

எனினும், குறித்த இரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை மற்றும் கோரிக்கைகளுக்கு நேர்மறையான தீர்வை வழங்கத் தவறியமை காரணமாக இவ்வாறு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் தொடர்பான சர்ச்சை! விசாரணையை தொடங்கிய சிஐடி

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் தொடர்பான சர்ச்சை! விசாரணையை தொடங்கிய சிஐடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020