கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு : பிரதான துப்பாக்கிதாரி அதிரடி கைது
கொழும்பு - கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கிராண்ட்பாஸ் காவல்துறையினரால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிராண்ட்பாஸ் - நாவலகம் வீதி பகுதிக்கு கடந்த 17 ஆம் திகதி இரவு 09.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் இருந்த இரண்டு நபர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
காவல்துறையினர் விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைகாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பில் கிராண்ட்பாஸ் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்கடை நீதிமன்றில் முன்னிலை
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 17 மணி நேரம் முன்
