புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை முதலிடம்! மல்லாகம் மாணவன் சாதனை
Sri Lankan Peoples
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By Dhilak
புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின் சாதனை படைத்துள்ளார்.
யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் மாணவன் சு. சபின், புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலை சமூகத்திற்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்விச் சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி