தமிழரை தலை நிமிர வைத்த பெருமகனார் -சைவ மகா சபை புகழாஞ்சலி
ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதையும் தமிழரின் அடையாளமாக நல்லூரையும் மீள நிலைநிறுத்தி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சிவபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி திருக்கோவில் அறங்காவலர் சிவத்திரு. இரகுநாத குமாரதாச மாப்பாணர் (Iragunatha Kumaradasa Mappanar)அவர்கள் சைவத் திருக்கோவில் அறங்காவலருக்கு முன்னுதாரண புருசர் என சைவ மகா சபை புகழாஞ்சலி செலுத்தியுள்ளது.
நேரம் தவறாத நேர்த்தி, எவருக்கும் தலைவணங்கா நேர்மை என தரணி எங்கும் தமிழரை தலை நிமிர வைத்த பெருமகனார் ஆயிரம் பிறை கண்ட சிவ நெறிச் செம்மல் திருக்கைலாலயத்தில் பேரின்ப பெருவாழ்வு பெறட்டும்.
அவரது வாழ்வு எம் அனைவருக்கும் குறிப்பாக சைவத் திருக்கோவில்கள் அனைத்திற்கும் முன்னுதாரணமாக மிளிரட்டும்.
அமரரின் உயரிய பணிகளிற்கு சிரம் தாழ்த்தி
சிவப் பரம்பொருளையும் சிவகுமாரனாகிய கந்தப் பெருமானையும் பிரார்த்தித்து ஆத்மார்த்த வணக்கங்களை சைவ மகா சபை தெரிவித்து நிற்கின்றது.