இலங்கை தொடர்பில் தெற்காசிய விசேட ஆய்வாளர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் முக்கிய பிரச்சினை, மொத்த உற்பத்திக்கு அமைவாக நடைமுறையில் உள்ள கடன் அதிகமாக இருப்பதே காரணம் என தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர் (uans Timmer) தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணையவழி மூலமான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
“கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றினால், பல பிரச்சினைகளை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசாங்கத்தால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளும் உண்டு.
அத்தோடு, இலங்கையின் நெருக்கடிக்கு காரணம், மொத்த உற்பத்திக்கு அமைவாக நடைமுறையில் உள்ள கடன் அதிகமாக இருப்பதேயாகும்.
எனவே, எதிர்காலத்தில் கடனைச் செலுத்தும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுப்பது முக்கிய தேவையாகும்” என அவர் கூறியுள்ளார்.