இணையவழி நிதி மோசடி: 58 இலங்கையர்கள் கைது!
இணையத்தில் பணம் மோசடி செய்த 58 இலங்கையர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (Criminal Investigation Department) கைது செய்துள்ளனர்.
கொழும்பு (Colombo) - கிருலப்பனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் இன்று (09.11.2024) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த மோசடியில் இந்தியா (India) , சீனா (China) உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் தங்கியிருந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |