இறந்த ஒருவர் உயிருடன் இருப்பதாக ஆவணம்...! கிராம உத்தியோகத்தர் கைது
உயிழந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை (Kalutara) பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தற்போது களுத்துறை - தேக்கவத்தை கிராம அதிகாரியின் பகுதியில் கடமையாற்றும் கிராம அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கைது செய்யப்பட்ட நபர் வஸ்கடுவ, மில்லகஹந்திய பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 52 வயதானவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
2021 ஆம் ஆண்டு களுத்துறை பிரதேசத்தில் மற்றுமொரு கிராம உத்தியோகத்தரின் பிரதேசத்தில் கடமையாற்றும் போது உயிரிழந்த பெண் ஒருவரின் பெயரில் முஸ்லிம் தேவாலயமொன்றின் மவ்லவி ஒருவருக்கு அவர் உயிருடன் இருப்பதாக சந்தேகத்திற்குரிய கிராம உத்தியோகத்தர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, இவ்வாறு வழங்கப்பட்ட கடிதத்தை பெற்றுக்கொண்ட பெண் ஒருவர், களுத்துறை வெட்டுமகட பிரதேசத்தில் வேறு ஒருவருக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதிக்கு கடிதத்தை சமர்ப்பித்து போலி பத்திரம் தயாரித்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடிதத்தை வழங்கிய பெண்ணை தனக்கு தெரியாது எனவும், அவர் இரண்டு சிறு குழந்தைகளுடன் வந்து கேட்டதை அடுத்து கடிதம் வழங்கப்பட்டதாகவும் கிராம உத்தியோகத்தரின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |