வெளிநாடொன்றில் பற்றி எரிந்த குடியிருப்பு கட்டிடம்: பலியான மக்கள்
சீனாவில் குடியிருப்பு கட்டிடமொன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
குவாங்டாங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டத்தில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
தீயணைப்புப் படை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் ஏராளமான தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை அணைத்துள்ளனர்.
இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி அந்தக் கட்டடத்தில் வசித்து வந்த சுமார் 12 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த, விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹாங்காங்கில் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 150 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |