காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்யப்பட்ட நபர்! தென்னிலங்கையில் நடந்த சம்பவம்
Sri Lanka Police
Sri Lanka
Death
By pavan
கம்பஹா மாவட்டம் கந்தானையில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
சப்புகஸ்கந்த பிரதேசத்தில் வைத்து 49 வயதுடைய குறித்த நபரை நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
அதன்போது காவல்துறையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கந்தானை - பொல்பித்திமுகலான பகுதியில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்