கிரேன்ட்பாஸ் மற்றும் பிலியந்தலையில் துப்பாக்கிகள் மீட்பு!
கிரேன்ட்பாஸ் மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிரேன்ட்பாஸ், ஹெடேவத்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 27 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் சிசிரிடி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சந்தேகநபர் கைது
இதன்போது, குறித்த இடத்திற்குத் துப்பாக்கியைக் கொண்டு வந்து இட்டுச் சென்ற நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, பிலியந்தலை பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இந்தத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
எனினும், குறித்த துப்பாக்கி தொடர்பில் தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |