கடத்தல் பிக்குகளின் முதலாளி ஹாஜி-யார்...!
தமிழகம் மற்றும் தமிழர்தாயகத்துக்கு இடையிலான தொப்புள் கொடி உறவு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல ராஜபக்சகளின் நாமல் போன்றவர்கள் கூட கண்டனம் செய்யும் அரசியலை தமிழக கடற்தொழிலாளர்களின் ஒரு தாக்குதல் வெளிப்படுத்திய செய்திகளும் வந்தன
தமிழகத்தின் நாகப்பட்டின செருதூர் கடற்தொழிலாளர்களுக்கும், யாழ்பாண கடற்தொழிலாளர்களுக்கும் இடையே கடந்த 26,இரவு, கடலில் ஏற்பட்ட ஒரு மோதலின் பின்னர் தமிழக கடற்தொழிலாளர்களிடம் சிக்கிய காங்கேசன்துறை வளலாயைச் சேர்ந்த ஒரு கடற்தொழிலாளர் அக்கரையில் வைத்து அவர் அச்சுறுத்தபட்டு தாக்கப்படும் காட்சிகள் ஈழத்தமிழர்களின் சமுகவலைதளங்களில் பரவி ஆக்ரோசமான பதிவுகளுடன் ஒரு கொதிநிலையை ஏற்படுத்தியது.
எல்லைதாண்டி தமிழர் தாயக கடல்வளத்தை அடிக்கடி சூறையாடும் தமிழ் இழுவைப்படகுகள் வடபகுதி கடந்தொழிலாளர்களின் எவ்வளவோ வலைகளை அறுத்துநாசம் செய்த பின்னணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு கடற்தொழிலாளியை கட்டிவைத்து அடிக்கும் இந்த காட்சி ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
எனினும் ஊர் இரண்டுபடுத்தி கூத்தாடிகளை கொண்டாட விடக்கூடாது என்ற பிரக்ஞைதான் முன்னிலையில் இருக்கவேண்டும்
ஏனெனில் ஒரு காலத்தில் தென்னிலங்கையில் ராஜபக்கசாக்கள் ஒருகாலத்தில் எழுச்சியுறவைத்து அரசியல் நடத்திய பௌத்த தளம் தான் இப்போது பிக்குகளே போதைப்பொருளை கடத்தும் அளவுக்கு பரிணாமம் பெற்று போதை கிங்-பின் முதலாளி ஹாஜிகள் குறித்த புதிய செய்திகளை வழங்கும் நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |