கனடா உட்பட வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் அறிவிப்பு
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பல சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாடு வாழ் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கனடாவில் வாழும் இலங்கையர்களின் முக்கிய புத்தாண்டு கொண்டாட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடா வாழ் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க ஏற்பாட்டாளர்கள் பலர் தீர்மானித்துள்ளதுடன், பல நாடுகளில் வாழும் இலங்கையர்கள் இன்னும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
