போர் ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல் : ஹமாஸ் படை எடுத்த திடீர் முடிவு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் (Israel) மீறியதை அடுத்து, அடுத்தக்கட்ட பணயக்கைதிகள் விடுவிப்பை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் (Hamas) படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வாரங்களாக, ஹமாஸ் குழுவின் தலைமை, எதிரி படைகளின் வீதி மீறல்களையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதையும் கண்காணித்து வருகிறது.
வடக்கு காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு செல்வதை தாமதப்படுத்துதல், காஸா முனையின் பல்வேறு பகுதிகளில் ஷெல் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் தாக்குதல் நடத்துவது, ஆகியவை இந்த வீதி மீறல்களுள் அடங்கும்.'' என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் குழு
ஆனால் ஹமாஸ் குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் முழுமையாக கடைபிடித்து வருகிறது.
அதன்படி, வரும் சனிக்கிழமை (15.02.2025) இஸ்ரேலிய பணையகைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ஏறத்தாழ 15 மாத போரைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஜனவரி மாத இறுதியில் 6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி பரஸ்பரம் இரு தரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா பகுதியில் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர வேண்டிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் ராணுவம் தடுப்பதாக கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)