காசாவில் கால் வைத்தால் பணயக்கைதிகளை கொல்வோம் : இஸ்ரேலை மிரட்டுகிறது ஹமாஸ்
தங்களிடம் உள்ள பணைய கைதிகளை மீட்க இஸ்ரேல் (Israel) முயன்றால் நொடியும் யோசிக்காமல் அவர்களைக் கொன்றுவிடுவோம் என ஹமாஸ் (Hamas) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஹமாஸின் இராணுவ பிரிவான இஸ் எல்-தீன் அல்-கஸ்ஸாம் படை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேல் பணைய கைதிகளைக் கொன்றால் என்னவாகும் என்ற விளைவுகள் குறித்து கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கை
அத்தோடு, இஸ்ரேல் மீட்பு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தாக்குதல் நடத்தப்படும் எனவும் அதற்கு இஸ்ரேல்தான் பொறுப்பாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஓராண்டிற்கு மேலாக மோதல் போக்கு நிலவி வருகின்ற நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா (Hezbollah) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே இதுபோல எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை.
தொடர்ந்து மோதல்
இதனால் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகின்ற நிலையில் ஹமாஸ் தலைவர் சின்வார் (Yahya Sinwa) கொல்லப்பட்ட போதிலும், ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் காசாவில் உள்ள அப்பாவி பலஸ்தீனர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சூழலில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படை தற்போது குறித்த அறிக்கையின் மூலம் பகீர் மிரட்டலை விடுத்துள்ளது.
இதே நேரம் குறித்த அறிக்கைகைக்கு இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்தவொரு பதிலும் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |