அடுத்தடுத்து உருளும் முக்கிய புள்ளிகளின் தலைகள்: ஹமாஸை மிரளவைக்கும் இஸ்ரேல்!
தெற்கு காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையை இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்கியதில் ஹமாஸ் அரசியல் குழு உறுப்பினர் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குலில் மற்றைய நபர்கள் காயமடைந்துள்ளதாகவும் பாரிய தீ விபத்து ஒன்றும் ஏற்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கட்டிடம் இஸ்ரேல் இராணுவத்தால் தாக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஹமாஸ் மீது குற்றச்சாட்டு
இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹமாஸின் அரசியல் குழு உறுப்பினர் இஸ்மாயில் பர்ஹூம் (Ismail Barhoum) என்பவரே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு இயங்கி வரும் ஹமாஸ் போராளிகளை தாக்கியதாக கூறும் இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் செயல்படுவதால், பொதுமக்கள் இறப்புக்கு ஹமாஸைக் குற்றம் சாட்டியுள்ளது.
சிறுவன் பலி
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இரண்டு நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 16 வயது சிறுவனும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், போரில் 50,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் நேற்று (23) முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 21 மணி நேரம் முன்
