ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரையும் சாய்த்தது இஸ்ரேல்
தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் (israel)நடத்திய வான்வழித் தாக்குதலில் தங்கள் அரசியல் பிரிவு தலைவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ்(hamas) தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்கள் சலா அல்-பர்தவீல்(Salah al-Bardaweel) மற்றும் அவரது மனைவி என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை தெற்கு காசா பகுதியான கான் யூனிஸில் நடத்தப்பட்டுள்ளது.
தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது நடத்தப்பட்ட தாக்குதல்
கூடாரமொன்றில் தனது மனைவியுடன் சேர்ந்து தொழுகையில் அவர் ஈடுபட்டிருந்தபோது இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை தாக்குதல்
இதற்கிடையில், காசா பகுதியில் வான், கடல் மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்று இஸ்ரேல் எச்சரித்திருந்தது.
காசாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்கும் வரை இஸ்ரேல் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 10 மணி நேரம் முன்
