யாழ். பருத்தித்துறையில் மீட்கப்பட்ட கைக்குண்டு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Rakesh
யாழ். பருத்தித்துறை - கொட்டடி மீன் சந்தைப் பகுதியிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதியில் அகழப்பட்ட மணல், கொட்டடி மீன் சந்தைப் பகுதியில் வீதியோரமாக அண்மையில் கொட்டப்பட்டிருந்தது.
அதற்குள் இருந்தே இந்த கைக்குண்டு நேற்று அவதானிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் பருத்தித்துறைப் காவல்துறையினருக்கு கடற்தொழிலாளர்கள் தகவல் வழங்கியிருந்தனர்.
மேலதிக நடவடிக்கை
காவல்துறையினர் மேற்கொண்ட மேலதிக நடவடிக்கையின் அடிப்படையில், அந்த கைக்குண்டு விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டு, மணற்காட்டுப் பகுதியில் வைத்து பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி