இலங்கையில் சரிந்தது தங்கத்தின் விலை
இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வடைந்த தங்கத்தின் விலை இன்று சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நேற்றுடன் (27) ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் 2000 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கத்தின் விலை
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,425 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,669 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் ஒரு அவுண்ஸ் வெள்ளி 74.23 அமெரிக்க டொலருக்கு இன்று விற்பனையாகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |