பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!
இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
வெயாங்கொடை காவல் பிரிவுக்குட்பட்ட சமூக காவல் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தொலைபேசி எண்
இதன்படி, 109 எனும் புதிய விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இலக்கத்திற்கு அளிக்கப்படும் முறைப்பாடுகளுக்கு 48 மணித்தியாலங்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்புணர்வுக்குட்படுத்தப்படும் வழக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
முறைப்பாடு
பெண்கள் மற்றும் குழந்தைகளின் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.
இந்த நிலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களை கருத்தில் கொண்டும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் பேருந்துகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்கள் அதிக நெருக்கடிகளை எதிர்நோக்குகிறார்கள்.
இவ்வாறாக, பெண்கள் தொந்தரவுக்குட்படுத்தப்பட்டால் 109 எனும் தொலைபேசி எண்ணுக்கு உடனடியாக அழைத்து, முறையிடுங்கள்“ என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |