மாலைதீவு நாடாளுமன்றத்தில் வெடித்த மோதல்...!
மாலைதீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்குள் இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.
மாலைதீவு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தின் போது, இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
மோதல்
மாலைதீவு அதிபர் முகம்மது முய்சுவால் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்களுக்கு ஒப்புதல் வழங்கும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
*Viewer discretion advised*
— Adhadhu (@AdhadhuMV) January 28, 2024
Parliament proceedings have been disrupted after clashes between PPM/PNC MPs and opposition MPs. pic.twitter.com/vhvfCBgQ1s
இதன் போது, முகம்மது முய்சுவுக்கு ஆதரவு கட்சிகளான மக்கள் தேசிய காங்கிரஸ் மற்றும் மாலைதீவு முற்போக்கு கட்சி ஆகியவற்றுக்கும் முன்னாள் அதிபர் முகம்மது சோலியின் மாலைத்தீவு ஜனநாயக கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வாக்குவாதம்
மாலைதீவு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் செயல்படும் எதிர்க்கட்சி, அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதற்கு நடைபெறும் வாக்கெடுப்பை நிறுத்த கோரியது.
இதனால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, இர தரப்பினரும் அடித்துக் கொண்டுள்ளனர். இந்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |