கனடாவில் பகிரங்க மன்னிப்பு கோரிய ஹரி ஆனந்த சங்கரி
கனடிய(canada) அரசாங்கத்தின் சார்பில் பழங்குடியின சமூகத்தினரிடம் பழங்குடியின விவகார அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஒன்றாரியோ பழங்கு டியின சமூக மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த சம்பவத்திற்காக தற்பொழுது அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி மன்னிப்பு கோரியுள்ளார்.
பழங்குடியின மக்களின் காணிகள் விற்பனை
1862 ஆம் ஆண்டு பழங்குடியின மக்களின் காணிகளை விற்பனை செய்து கிடைக்கப்பெற்ற பணத்தை அந்த மக்களுக்கு வழங்காது வேறு அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளதுடன் அந்த மக்களுக்கு தற்பொழுது நட்டஈடு வழஙகப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |