சீனாவிலிருந்து இத்தனை மில்லியன் “சினோபார்ம்” தடுப்பூசிகளை இலங்கை பெற்றுக் கொண்டதா? வெளிவந்த அறிக்கை
Vaccine
Chine
SriLanka
Sinoform
By Chanakyan
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளையதினம் இலங்கைக்கு வழங்கப்படும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி மேலும் 2 மில்லியன் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளது.
குறித்த தடுப்பூசி தொகுதிகளுடன் சீனாவினால் இலங்கைக்கு இதுவரை மொத்தம் 80 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் செப்டெம்பர் மாதத்தில் மட்டும் 7 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கையில் மிகவும் பரவலாக சினோபோர்ம் தடுப்பூசியை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சீன இராணுவம் வழங்கும் தடுப்பூசிகளை படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி