ஆழிப்பேரலையில் உயிர் நீர்த்தவர்களுக்கு மலையகமெங்கும் அஞ்சலி
#Hatton #Death #People
By Vasanth
ஆழிப்பேரலையில் உயிர் நீர்த்தவர்களின் 16 ஆவது நினைவுதினம் மலையகமெங்கும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீர்த்தனர்.
இந்த நாளில் காலை 9.25 தொடக்கம் 9.27 வரை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது.
அந்த வகையில் 16 ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஹட்டன் நகர மணிக்கூட்டுச் சந்தியிலுள்ள சமன் போதி, பௌத்த விகாரைகள், இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் எனப்பல இடங்களிலும் மெழுகுவர்த்தி ஏற்றி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் மஸ்கெலியா,பொஹவந்தலாவ, நுவரெலியா, நகரங்கள் மற்றும் பெருந்தோட்ட பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி