மது போதையில் சாரத்தியம் - எரிபொருள் பௌசருடன் மோதிய மகிழுந்து (படங்கள்)
எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசரும் மகிழுந்து ஒன்றும் நேருக்கு நேர் மகிழுந்தில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது ஹட்டன் நுவரெலியா பிரதான வீதி, திம்புலபத்தனை சந்தியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
வெலிமடையிலிருந்து கொட்டகலை திசை நோக்கிச் சென்ற பௌசரும் நோர்வூட்டில் இருந்து தலவாக்கலை திசை நோக்கிச் சென்ற மகிழுந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
பலத்த சேதம்

மகிழுந்தை ஓட்டிச் சென்ற சாரதி அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஐந்து பேரும் நோர்வூட் பிரதேசத்தில் வசிக்கும் 20-30 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் திம்புலபத்தனை காவல் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்தில் மகிழுந்தும் எரிபொருள் பௌசரும் பலத்த சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



