மயிலத்தமடு - மாதவனையில் சட்டத்துக்கு முரணான குடியேற்றம்! நடவடிக்கை கோரும் சிறிநேசன்
சட்டவிரோதமாக குடியேறிய மயிலத்தமடு, மாதவனை பகுதியிலிருக்கின்றவர்களை நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அவர்களை மேய்ச்சல் தரை பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதான் எமது கோரிக்கையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை ஆகிய மேய்ச்சல் தரை பிரதேசத்தில் யுத்தத்துக்கு பின்னர் 2012 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் அம்பாறை மட்டும் பொலன்னறுவை மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் மேச்சல் தரைகளில் கால்நடைகளை பராமரிக்க முடியாத அளவிற்கு அத்துமீறிய வேலைகளை செய்து வருகின்றார்கள்.
அச்சுறுத்துவது போன்ற செயபாடு
அவர்கள் கால்நடைகளை சுடுவது வெட்டுவது காயப்படுத்துவது பண்ணையாளர்களை கடத்திச் செல்வது அச்சுறுத்துவது போன்ற செயபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அண்மையில் கால்நடை பண்ணையாளர் ஒருவர் இவ்வாறு கடத்தப்பட்டு பின்னர் மிகுந்த பிரியத்தின் மத்தியில் அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார்.
இவ்வாறு சட்டவிரோதமாக மேச்சல் தரைகளை பிடித்துள்ளவர்கள் ஆட்களை கடத்துகின்ற வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள். மேய்ச்சல்தரை விடயத்தில் ஒரு இன முருறுனை ஏற்படுத்துகின்ற விதத்தில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.
பண்ணையாளர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களை செய்கின்ற பொழுது அவர்களை நாம் சமாதானப்படுத்த முடிகின்றோமே தவிர மாறாக நிரந்தரமாக அத்துமீறி குடியேறியுள்ளவர்களை அங்கிருந்து அகற்ற முடியாமல் உள்ளது” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |