விஜயின் ஜனநாயகனுக்கு UA சான்றிதழ் - உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்சார் சான்றிதழ் தொடர்பான பெரும் சர்ச்சைக்குப் பிறகு, விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தணிக்கை குழுவிற்கு உத்தரவிட்டது.
மாற்றங்கள் செய்யப்பட்டவுடன் சான்றிதழை வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் சென்சார் குழுவிற்கு உத்தரவிட்டது.
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய காட்சி
ஆனால், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளினால் சென்சார் சான்றிதழ் (தணிக்கை சான்று) வழங்கவில்லை.

இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது தயாரிப்பு நிறுவனம். நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ரூ.500 கோடி முதலீடு செய்து படம் எடுத்துள்ளோம்.
குறித்த திகதியில் படம் வெளியிடப்படவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படும்’’ என்றும் தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது.
உத்தரவை இரத்து
ஆனால் ரூ.500 கோடியோ ரூ.1 கோடியோ விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்றுதான். நாளை மறுதினம் ரிலீஸ் எனக்கூறி சான்றிதழ் கேட்க முடியாது என்றும் திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்றும் தணிக்கை வாரியம் தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று (9) வழங்குவதாக அறிவித்தார்.
அதன்படி இன்று விஜயின் ஹஜனநாயகன் படத்துக்கு உடனடியாக UA சான்றிதழ் வழங்க தணிக்கை குழுவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவையும் இரத்து செய்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 9 மணி நேரம் முன்