இரவு தூங்கும் முன் இதை மட்டும் செய்தால் போதும்: முக சுருக்கம் காணாமல் போகும்
ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் முக சுருக்கம் ஏற்படுவது வழக்கம். அதனை மறைக்கவோ அல்லது தடுக்கவோ பயன்படுத்தும் இரசாயன க்ரீம்கள் தற்காலிக தீர்வுகளை தந்தாலும், பாரிய விளைவுகளையும் ஏற்படுத்தும்.
எனவே, ஆரம்ப நிலையிலேயே சருமத்தை கவனித்துக்கொள்வதன் மூலம் வயதான அறிகுறிகளை தடுக்கலாம்.
தோல் சுருக்கம், நெற்றியில் சுருக்கங்கள், கண்களுக்குக் கீழே கரும்புள்ளிகள் போன்றவை வயதானதன் அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றது.
முக சுருக்க பிரச்சினை
சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால், உங்கள் சருமம் விரைவில் சுருக்கம் அடைய வாய்ப்புள்ளது.மேலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் ஆகியவையும் சுருக்கங்களை ஏற்படுத்தும்.
எனவே, இயற்கையான முறையில் சுருக்கம் ஏற்படுவதை எவ்வாறு தடுக்கலாம் என பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய்யானது, இயற்கையிலேயே சருமத்தை பாதுகாப்பாகவும் ஈரப்பதமாகவும் வைக்கின்றது. இது சருமத்தில் கொலாஜனை உற்பத்தி செய்து சருமத்தை மென்மையாக வைத்திருக்கும்.
முகத்தில் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து மசாஜ் செய்வது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. எனவே, சருமத்தில் சுருக்கம் இல்லாமல் போகும்.
தினமும் இரவில் தூங்கும் முன்
தினமும் இரவில் தூங்கும் முன் சில துளிகள் தேங்காய் எண்ணெயை எடுத்து தோலில் நன்றாக மசாஜ் செய்து வரவும்.
சருமம் எண்ணெயை முழுமையாக உறிஞ்சும் வரை மசாஜ் செய்யவும். பின் ஈரமான துணியால் முகத்தை துடைக்கவும். இதில் 3 துளி தேங்காயுடன் 2 சொட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்து முகத்தில் தடவினால் கூடுதல் பலன் பெறலாம்.
இரவில் படுக்கும் முன் இதைச் செய்தால் சருமம் மிகவும் மென்மையாக மாறுவதோடு முகத்தில் சுருக்கங்களும் ஏற்படாது.
மேலும், விட்டமின் ஈ சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து முகத்தில் நன்கு மசாஜ் செய்து வந்தால், சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |