தொப்பையைக் குறைக்க எளிய வழி: வீட்டிலேயே தயாரிக்க கூடிய இயற்கை பானம்
By Shalini Balachandran
உடலினுள் அதிகரித்துள்ள கொழுப்புக்கள் ஒருவரது தோற்றத்தை மட்டும் பாதிப்பதில்லை அந்த கொழுப்புக்களானது சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
எனவே இப்படிப்பட்ட கெட்ட கொழுப்பை ஒரே இரவில் குறைத்துவிட முடியாது.
ஆனால் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம் உடல் எடையில் முக்கியமாக தொப்பையை குறைப்பதில் கணிசமான மாற்றத்தைக் காணலாம்.
அவை என்ன என்பவை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உணவுப் பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- வெந்தய பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
- சோம்பு பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
- சுக்கு பவுடர் - 2 டீஸ்பூன்
- பட்டை - 2 துண்டு
- கல் உப்பு - 1/2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப

தயாரிக்கும் முறை:
- இந்த பானம் தயாரிப்பதற்கு ஜாரில் எலுமிச்சை சாற்றினைத் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டேபிள் ஸ்பூன் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கலந்தால் பானம் தயார்.
இந்த பானத்தை தினமும் மதிய உணவுக்கு முன் குடித்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |