நாட்டின் சில பகுதிகளுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நாளை (20.08.2026) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, நாளை பகல் நேரத்தில் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் திணைக்கள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, வெப்பக் குறியீட்டு முன்னறிவிப்பானது, சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெப்ப வானிலை எச்சரிக்கை
இதன்படி நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், அதே சமயம் தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அதிகளவான நீரை பருகுவதோடு, கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening