யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 43ஆயிரத்து 682பேர் பாதிப்பு!

Jaffna Sri Lanka Climate Change Floods In Sri Lanka
By Harrish Nov 27, 2024 09:33 PM GMT
Report

புதிய இணைப்பு

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் 1,816 குடும்பங்களைச் சேர்ந்த 5,749 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 இடைத்தங்கல் முகாம்களில், 268 குடும்பங்களைச் சேர்ந்த 1006 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில், 59 குடும்பங்களைச் சேர்ந்த 186 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 43ஆயிரத்து 682பேர் பாதிப்பு! | Heavy Rain In Jaffna

யா/கொடிகாமம் போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில், 47 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு தங்கியுள்ள கர்பிபிணித் தாய்மார் மற்றும் வயோதிபர்களுக்கான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேவேளை தென்மராட்சி பிரதேசத்தின் அரச அலுவலகங்கள் மற்றும் வணக்க ஸ்தலங்களுக்குள்ளும் வெள்ளம் உட்புகுந்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

மேலதிக செய்திகள் : பு.கஜிந்தன்

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணத்தில்(Jaffna) தொடரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 12970 குடும்பங்களைச் சேர்ந்த 43ஆயிரத்து 682பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பாதிப்புகள் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்," இதன்போது, 66 பாதுகாப்பு முகாம்களில் ஆயிரத்து 634 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 793பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு விடுத்த அதிரடி எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு விடுத்த அதிரடி எச்சரிக்கை!

வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 1303 குடும்பங்களைச் சேர்ந்த 4156 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. 11 பாதுகாப்பு இடங்களில் 205 குடும்பங்களைச் சேர்ந்த 728பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 464 குடும்பங்களை சேர்ந்த 1462 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 43ஆயிரத்து 682பேர் பாதிப்பு! | Heavy Rain In Jaffna

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 829 குடும்பங்களை சேர்ந்த 2904 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் முழுமையாகவும், 61 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு இடங்களில் 396 குடும்பங்களைச் சேர்ந்த 1470பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 1090 குடும்பங்களைச் சேர்ந்த 3574பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

ஏற்பட்டுள்ள சேதம்

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 1359 குடும்பங்களை சேர்ந்த 4234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பாதுகாப்பு இடங்களில் 83 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 2164 குடும்பங்களை சேர்ந்த 7187 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாகவும், ஆறு வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன. 6 பாதுகாப்பு இடங்களில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 289 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 43ஆயிரத்து 682பேர் பாதிப்பு! | Heavy Rain In Jaffna

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 215 குடும்பங்களை சேர்ந்த 764 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் சிறு வர்த்தக நிலையம் ஒன்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 901 குடும்பங்களை சேர்ந்த 3171 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 6 பாதுகாப்பு இடங்களில் 368 குடும்பங்களைச் சேர்ந்த 1333 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை கட்டமைப்பு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 1240 குடும்பங்களை சேர்ந்த 4023 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 2 பாதுகாப்பு இடங்களில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 126பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு நோக்கி நகரும் சூறாவளி! வானிலை ஆய்வாளர் விடுத்த எச்சரிக்கை

வடக்கு நோக்கி நகரும் சூறாவளி! வானிலை ஆய்வாளர் விடுத்த எச்சரிக்கை

பாதிக்கப்பட்ட குடும்பங்கள்

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 1618 குடும்பங்களை சேர்ந்த 6020 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 8 பாதுகாப்பு இடங்களில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 490பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 1113பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகள் பகுதியளவிலும், மூன்று சிறு வணிக நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 339 குடும்பங்களைச் சேர்ந்த 1013பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. ஒரு சிறு வணிக நிலையமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் இரண்டு பாதுகாப்பு இடங்களில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 57பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 43ஆயிரத்து 682பேர் பாதிப்பு! | Heavy Rain In Jaffna

வேலணை பிரதேச செயலர் பிரிவில் 545 குடும்பங்களை சேர்ந்த 1866 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 8 பாதுகாப்பு இடங்களில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 57பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 286 குடும்பங்களைச் சேர்ந்த 967பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 306 குடும்பங்களைச் சேர்ந்த 909 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 3 பாதுகாப்பு இடங்களில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்

மாவீரர் நினைவேந்தல் நாள் : அஞ்சலி செலுத்திய சீமான்

மாவீரர் நினைவேந்தல் நாள் : அஞ்சலி செலுத்திய சீமான்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020